NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

200 க்கும் மேற்பட்ட புதிய சிறைகளை கட்டுவதற்கு சீன அரசாங்கம் முடிவு!

சிறப்பு தடுப்பு வசதிகளுடன் கூடிய 200 க்கும் மேற்பட்ட புதிய சிறைகளை கட்டுவதற்கு சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் எடுத்த முடிவின் பிரகாரம், இந்த சிறைகள் கட்டப்படும் என்று கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சட்ட ஆலோசகர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ சந்திக்காமல் 06 மாத காலத்திற்கு தடுத்து வைப்பதற்குரிய சிறைச்சாலைகள் கட்டப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

லியுஷி என்று அழைக்கப்படும் இச்சிறைச்சாலைகளை 2018ஆம் ஆண்டு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்கள் அந்த மையங்களில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

Share:

Related Articles