கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி விலை உயர்வினால் தற்போதைய அரிசி கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்க முடியாத காரணத்தினால் சில சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தொழிலை நிறுத்துவதாகவும் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.