(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
2023ஆம் கல்வியாண்டின் பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் (21) நிறைவடைகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்கு எதிர்வரும் 24ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை ஒக்டோபர் 13ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரையில் தொடரும்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இரண்டாம் தவணை விடுமுறையின் போது நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.