2023 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானில் தோன்றவுள்ளது.
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் நிகழவுள்ள அரிய சூரிய கிரகமாக இது கருதப்படுகின்றது.
இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் நெருப்பு வளைய கிரகணமாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும்.
சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணைய தளத்தில் காணலாம்.
இந்த நிகழ்வை காண வானியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.