NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று (20) ஆரம்பமாகிறது.

சுர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் 9ஆவது தடவையாக நடத்தும் இப்போடடிகளை அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இறுதிப் போட்டி ஓகஸ்ட் 20ஆம் திகதி சிட்னி நகரில் நடைபெறவுள்ளது.

இம்முறை முதல் தடவையாக 32 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இதற்கு முன் அதிகபட்சமாக 24 அணிகளே பங்குபற்றின.

முதலாவது போட்டியில் நியூஸிலாந்து, நோர்வே அணிகள் மோதவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரிலுள்ள ஈடன் பார்க் அரங்கில் இப்போட்டி ஆரம்பமாகும். அதற்கு முன் இதே அரங்கில் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3,30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

Share:

Related Articles