(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
2023-2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்புகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் 15ஆவது மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அதை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 1871இல் நடத்தப்பட்டது. கடைசியாக சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2012இல் நடத்தப்பட்டது.
மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.