2023ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது.
சித்ரா பௌர்ணமி தினத்தில் இரவு 8:45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நீடிக்கும் எனவும், சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு உபகாரங்கள் எதுவும் தேவையில்லை என்றும் நாசா அறிவித்துள்ளது.
நாளை நிகழவிருக்கும் சந்திரகிரகணம் பகுதி சந்திர கிரகணமாக தெரியும். இந்த கிரகணத்தின் போது நிலவு வழக்கத்தை விட சற்று கருமையாக காணப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகணத்தை ஐரோப்பியா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் பார்க்கமுடியும்.