NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

2024ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டள்ளார்.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி புதிய பாடசாலை கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைவுள்ளதுடன், இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பமானதோடு, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles