NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.

*வரவுக்கேற்ற செலவை கடந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை .இலவச நிவாரணங்கள் , அதிகப்படியான , சம்பளம் , தேவையற்ற செலவுகள்காரணமாக நாங்கள் உலகில் கடன்பட்டோம். வங்குரோத்தானோம்.- ரணில் 

*பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களுடன் மக்களும் ஒத்துழைத்தார்.தடம்புரண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பினோம்.நீண்டகால திட்டங்களை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.அரசியல் இலாபம் கருதி மட்டும் செய்யப்படும் வேலைகள் வெற்றியளிக்காது.அதுவே வரலாறு கற்றுத்தந்த பாடம்.அரசியல் தேவைகளுக்காக பொய் கூறவேண்டாம். – ரணில் 

 * பொருளாதார பிரச்சினைகளுக்கேற்ற ஊதியம் இல்லை.மின்சார , வர்த்தக , உற்பத்தி துறைகளில் நெருக்கடி உள்ளது.இந்த பயணம் சிரமம் என்றாலும் அதில் செல்லவேண்டியுள்ளது. – ரணில் 

* சம்பள அதிகரிப்பினை கண்டபடி செய்ய முடியாது .அரச வருமானத்தை அதிகரித்தால் மட்டும் செய்யலாம்.கடன் வாங்கியோ அல்லது பணத்தை அச்சிட்டோ நாங்கள் அதனை செய்தால் பொருளாதாரம் மேலும் மோசமடையும் – ரணில் 

*கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது . நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது. துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை – ரணில் 

Share:

Related Articles