NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 வரவு – செலவுத் திட்டம்(UPDATES)

UPDATE

09) அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

08)

♦️ உயர் தரம் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

♦️ தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும்.

♦️சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப நிறுவனம், முகாமைத்துவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஆகிய 4 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

♦️ 19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 1 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

♦️ அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

07) நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

06) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்களுக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

05) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படவுள்ளதாகவும், அந்தக் குடும்பங்களுக்கு முழு வீட்டு உரிமை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு.

04) நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 3000 ரூபாவுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன்இ அந்த வாடகை தொகையினை முற்று முழுதாக நிறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த வீடுகளின் உரிமையை அந்தந்த குடும்பங்களுக்கே வழங்கப்படும் எனவும் 2024 ஆம் ஆண்டுகளுக்குள் இந்த நடவடிக்கை நிறைவு செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

03)அரச ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவு 17,800 ரூபாவாக அதிகரிப்பட்டுள்ளது.

02) புற்றுநோயாளர்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்காக 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

01) சம்பள உயர்வை உடனடியாக வழங்க முடியாது எனவும் அரச வருமானத்தை அதிகரித்த பின்னரே சம்பளத்தை அதிகரிக்க முடியும் எனவும ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Share:

Related Articles