ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2024 Reunion International Villa de Bilbao – World Athletics Continental Tour இல் இலங்கை தடகள வீரர்களான தருஷி கருணாரத்ன மற்றும் கலிங்க ஹேவா குமாரகே முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.
பெண்களுக்கான 600M ஸ்பிரிண்ட் போட்டியில் பங்கேற்று, ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னா 1:24.84 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
தருஷி கருணாரத்னா தனது ஆட்டத்தின் மூலம் புதிய ஆசிய சாதனையை படைத்ததுடன், ஜப்பானின் அயனோ ஷியோமியின் 600 மீட்டர் கண்ட சாதனையையும் முறியடித்துள்ளார்.
இதேவேளை, ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் கலிங்க ஹேவா குமாரகே 45.91 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.