NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 ஆம் ஆண்டின் இதுவரை 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிப்பு!

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருடாந்தம் சுமார் 1,000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்

இதேவேளை 3,000 க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் ஏற்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் விபத்துகளில் மூன்றில் ஒன்று மோட்டார் சைக்கிள் விபத்து என குறிப்பிட்டள்ளார்.

2023 இல் வீதி விபத்துகள் குறைந்துள்ளதுடன் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை 1,352 ஆபத்தான வீதி விபத்துகளில் 1,417 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஒவ்வொரு 10 வருடங்களிலும் 30,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் விபத்துக்களில் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles