வருவாய் சேகரிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு மதுவரி வருவாய் இலக்கை 50 பில்லியன் ரூபாய்களால் உயர்த்தும் உத்தரவை, மது உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இதன்படி விருந்தகங்கள், உணவகங்கள், மதுபானகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு மது உற்பத்தியாளரால் ஏழு நாள் கடன் காலம் மட்டுமே வழங்கப்படும்.
அத்துடன் பொருட்களை வழங்கிய ஏழு நாட்களுக்குள் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து நிலுவைத் தொகையை வசூலித்து 15 நாட்களுக்குள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று மது உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய முறையின் கீழ், மதுவரி திணைக்களம் விநியோகத்தை நிறுத்தும் போது பணம் செலுத்த தவறிய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன் அனைத்து நிறுவனங்களும் அடுத்த ஆண்டுக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் அடுத்த ஆண்டுக்கான இலக்கை 180 பில்லியன்களில் இருந்து 230 பில்லியனாக உயர்த்தலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.