தைப்பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
தைப்பொங்கல் பண்டிகை ஒவ்வொரு நாளும் தை மாதத்தில் தான் கொண்டாடப்படுவதுடன், இன்றைய தினம் உலகவாழ் தமிழ்ர்களால் பல பாகங்பளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுவும் நான்கு நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால், பானையில் வைக்கப்படும் பொங்கலும், கரும்பும் தான்.
ஆடியில் விதைத்த நெல்லை தையில் அறுவடை செய்து, அதனுடன் வெல்லம் சேர்த்து புதுப்பானையில் வைத்து பொங்கலிட்டு இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவித்து படைத்துக் கொண்டாடுவார்கள்.
இதைதான் அறுவடை திருநாள் என்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு முன் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு தோரணங்கள் கட்டி கொண்டாடுவது வழக்கம்.