2025 ஆம் ஆண்டில், 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் 2027 ஆம் ஆண்டு இறுதியில் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்றுமுன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.