2025 ஆம் ஆண்டு உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகி 13 ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணியில் உள்ள உலக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளார்.