அரச ஊழியர்களின் சம்பளத்தை 15,750 ரூபாவால் அதிகரித்து குறைந்தபட்டச மாத சம்பத்தை 40,000 ரூபாவாகவும் அதற்கு மேலதிகமாக சம்பள உயர்வு 80 வீதத்தால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி சற்றுமுன் தெரிவித்தார்.
தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவில் இருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து மீண்டும் ஆராயவுள்ளதுடன், 1,700 ரூபா சம்பளத்தை வழங்கவும் உறுதியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்ட பகுதிகளின் வீட்டுத்திட்டங்களுக்காக 4,268 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சோயா, கௌப்பி, பாசிப்பயறு, உளுந்து, மிளகாய், உருழைக்கிழங்கு போன்ற தானிய விளைச்சல்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யானை மற்றும் மனித மோதலை தடுப்பதற்கான அபிவிருத்தி திட்டத்துக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மீண்டும் அந்த செய்தி
கொழும்பிலுள்ள மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு 100 பஸ்களை சேவையில் இணைப்பதாகவும் அதற்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் புகையிரத சேவையை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்வதற்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சற்றுமுன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அனர்த்தங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நட்ட ஈட்டை 10 இலட்சம் ரூபா அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
புத்தாண்டு காலத்தின் போது தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் சதொச ஊடாக அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களை அதில் இருந்து மீட்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும திட்டத்திற்காக 232.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புற்றுநோயாளர்களுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாகவும் முதியவர்களுக்கான கொடுப்பனவு 5000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் குழந்தைகளுக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், பராமரிப்பு மற்றும் அநாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு 5000 ரூபா வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் குறிப்பிட்டுள்ளார்.