NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்!

2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிகளவிலான அரசு விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் மற்றும் பிரிவெனா மாணவர்கள் வருடாந்த கற்றலுக்காக வருகை தரும் நாட்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில், முதல் 03 வாரங்கள் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்கான 26 பொது விடுமுறை நாட்களில் 04 விடுமுறை நாட்கள் மாத்திரமே வார இறுதி நாட்களில் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த இயலாது, இதனால் பாடசாலைகளை நடத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles