சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் 2026ஆம் ஆண்டில் புதிய சுகாதாரக்கொள்கையை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது சுகாதாரத்துறையினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆறு விடயப்பரப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
என்பதுடன் அரசாங்கத்தால் முன்வைக்கப் படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீட்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரி வித்தார். இதுதொடர்பில் கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
2015ஆம் ஆண்டின் பின்னர் 2026ஆம் ஆண்டில் புதிய சுகாதாரக் கொள்கையை தயாரி க்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்கைத் தயாரி ப்புகளை இந்த வருடத்தில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வாழ்க்கை வட்டத்தினூடாக மக்களை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த செயற்பாடுகளின்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சுகாதாரத்துறையில் புதிதாக இணைந்து கொண்டுள்ள பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு, சூழலியல் மாற்றம் என்பன சுகாதாரத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுகாதாரக் கொள்கைகளை தயாரி க்கும்போது எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கமளித்துள்ளது. 06 பிரி வுகளை உலக சுகாதார ஸ்தாபனம் பெயரி ட்டுள்ளது. சுகாதாரத்துறையின் விநியோகம், சுகாதாரத்துக்கான முதலீடு, நிதி ஒதுக்கீடு, மனிதவள முகாமைத்துவம், சுகாதார உபகரணங்கள், கட்டடங்களை உருவாக்குதல், தரவு சேகரி ப்பு என்பற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பால் பொது மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். சுகாதாரக் கொள்கை உருவாக்கத்தில் மக்களும் பங்களிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்நிலையில், இன்னும் சில வாரங்களில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதன்போது சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆரம்பக்கட்ட சுகாதாரத்துக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை அதிகரி க்க வேண்டும். அதேபோன்று ஒருசில நோய்களுக்கான சிகிச்சை ஒதுக்கீட்டையும் அதிகரி க்க வேண்டும். சிறுவர்களின் விருத்தி, போசணை மட்டம், மூளை வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். வறுமையின் மத்தியில் வாழும் சிறுவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியதும் அவசியமாகும் என்றார்.