NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2040க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம் – இஸ்ரோ

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் 3 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோதனைக்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டு, பெங்களுருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆளில்லா பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை முடித்துக்கொண்டு வருகிற 2025ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்படுகிறது.

சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உட்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிவதற்காக, இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு பணியாக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி (எல்.1) நோக்கி பயணித்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் ஹாலோ சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்படும்.

சந்திரயான் – 3 திட்டம் வெற்றி பெற்ற ஓகஸ்ட் 23ஆம் திகதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

14 புவி நாட்களில், இது நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஒக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது.

சிறிய செயற்கைகோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி.), மறுபயன்பாட்டு ஏவுதல் வாகனம் (ஆர்.எல்.வி.) திட்டம், எக்ஸ்ரே வானியல் பணி எக்ஸ்போசாட் (எக்போசாட்- எக்ஸ்-ரே போலரி மீட்டர் (செயற்கைகோள்)), விண்வெளி டாக்ஸி பரிசோதனை மற்றும் லாக்ஸ்-மீத்தேன் எந்திரம் ஆகியவை இதில் அடங்கும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles