NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

21 ஆம் திருவிழாவான இன்று கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21 ஆம் திருவிழாவான இன்று காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது.

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இதேவேளை இன்று மாலை தங்க ரத உற்சவமும் நாளை காலை மாம்பழத்திருவிழாவும் மாலை ஒருமுக திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளை மறுதினம் மாலை சப்பரத்திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles