NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

21 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் சென்று சிலிண்டர்களுடன் அட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles