NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

217 முறை ‘கொவிட்-19’ தடுப்பு ஊசிகளைப் பெற்றுக்கொண்ட நபர்!

ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை ‘கொவிட்-19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் கடந்த 29 மாதங்களாக தனியார் மருத்துவமனைகளிலிருந்து ‘கொவிட் 19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார்.   

குறித்த நபரிடம் மருத்துவ ஆய்வை மேற்கொண்ட எர்லாங்கன்-நூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘கொவிட்-19’க்கு எதிராக அவர் 217 தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும் அவருக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லையென  மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles