NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

220 இலட்சம் மக்களுக்கு துரோகம் செய்யப்போவதில்லை-சஜித்.

220 இலட்சம் மக்கள் வறுமையிலும், தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வரும் வேளையில், மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் கார் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திர ஏலம்தான் நாட்டின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக மாறியுள்ளது. இந்த மோசமான கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். மக்கள் ஆணைக்கும் மக்கள் உரிமைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த யுகத்தை உருவாக்க குடிமக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.தற்போது வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம், மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் பல்வேறு சலுகைகள், சிறப்புரிமைகள் என்பவற்றை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை பணத்துக்கு எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. என்றாலும் இந்த சலுகைகள், சிறப்புரிமைகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி மாட்டிக்கொள்ளாது. 220 இலட்சம் மக்களுக்கு தானும் தனது குழுவினரும் ஒருபோதும் துரோகம் செய்யப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.220 இலட்சம் மக்கள் வறுமையிலும், தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வரும் வேளையில், மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் கார் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திர ஏலம்தான் நாட்டின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக மாறியுள்ளது. இந்த மோசமான கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். மக்கள் ஆணைக்கும் மக்கள் உரிமைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த யுகத்தை உருவாக்க குடிமக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Share:

Related Articles