NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

221 மாணிக்கக்கற்களுடன் சீனப்பெண் கைது!

221 மாணிக்கக் கற்களை சட்டவிரோதமான முறையில் சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற சீனப் பெண்ணை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மாணிக்கக் கற்கள் கையிருப்பின் பெறுமதி ஒரு கோடியே 25 இலட்சத்து 37 ஆயிரத்து 808 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பொதியில் இந்த மாணிக்கக் கற்களை மறைத்து வைத்திருந்த நிலையில், அவை மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண்ணையும் கைது செய்தனர்.

Share:

Related Articles