NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

24 பயணிகளுடன்  வந்த விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு சென்றது

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான காலநிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.

24 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் இன்று காலை மீண்டும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தரும் என அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Share:

Related Articles