NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு : மகாராஷ்டிராவில் சம்பவம்

இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கர்ராவ் அரசு மருத்துவமனையில் இவ்வாறு இறந்தவர்களில் 12 பிறந்த குழந்தைகளும் உள்ளடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்ற 12 பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பாம்பு கடித்ததால் இறந்துள்ளனர்.

போதிய பணியாளர்கள் இல்லாததும்இ மருந்துகள் இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles