குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த இசைக் நிகழ்ச்சியை ‘எதேர அபி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அத்துடன், குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் இக்குழுவினரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.