இஸ்ரேல் தாக்குதல்களால் நரகமாக மாறிய காஸா பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஸா பகுதியில் இருந்து புதிய போலியோ நோய் தாக்கம் பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காஸாவில் உள்ள பலஸ்தீன குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை, இதனால் போலியோ நோய் உருவாகும் என உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளது