தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டராக பதிவாகி இருந்தது. தைவானில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்.
இந்த கடும் நிலநடுக்கத்தால் தாய்வானின் (Hualien) ஹூவாலியன் நகரில் பல மாடி கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்துள்ளன. இதனால் பெரும் பதற்றம் தாய்வானில் நிலவுகிறது. பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அத்தோடு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல புகையிரத சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தைவானைத் தொடர்ந்து ஜப்பானின், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சுனாமி அபாயம் பெருமளவு நீங்கிவிட்டதாகவும் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.