NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

25 நாட்களாக காணாமல் போயிருந்த யுவதிகள் மீட்பு!

25 நாட்களாக காணாமல் போயிருந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகள் மாத்தறை – உயன்வத்த பிரதேசத்தில் பெண்கள் விடுதியொன்றில் தங்கியிருந்த வேளையில் இன்று காலை கைதுசெய்யப்பட்டதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு யுவதிகளும் குருநாகல் நகரில் கொரிய மொழி வகுப்புக்கு செல்வதாக கூறி காணாமல் போயுள்ளதாக கலகெதர மற்றும் மாவத்தகம பொலிஸ் நிலையங்களில் அவர்களது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதன்படி அவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு யுவதிகளும் மாத்தறை உயன்வத்தையிலுள்ள வீடொன்றில் இருப்பதாக மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles