10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.