NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

27 வருடங்களுக்கு பின்னர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இலங்கை அணி..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் யுஎiளாமய குநசயெனெழ 96 ஓட்டங்களையும், முரளயட ஆநனெளை 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சுலையn Pயசயப 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனை 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடி இந்தியா அணி 26 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 110 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இதனால், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 க்கு பூச்சியம் என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து, இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

Share:

Related Articles