(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மெட்டா நிறுவனத்தால் நேற்று (06) அறிமுகப்படுத்தப்பட்ட Mobile Phone Application த்ரெட்ஸ் உடன் சுமார் 03 கோடி பயனர்கள் குழு இணைந்துள்ளது.
முதல் 07 மணி நேரத்தில் மட்டும் 10 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ட்விட்டர் செயலியைப் போன்ற அம்சங்களுடன் த்ரெட்ஸ் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒழுங்குமுறை விதிமுறைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் இன்னும் Threads விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையில், த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக ட்விட்டர் வழக்கு தொடர தயாராகி வருகிறது.
அதன் அம்சங்கள் சட்டவிரோதமாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.