NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3 பாடங்களிலும் 9,904 மாணவர்கள் A சித்தி!

R.M Sajjath

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் பரீட்சை நடாத்த வேண்டியிருந்ததாகவும், ஆனால் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம் 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2021 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் வீதம் 62.9 வீதமாகவும், இந்த ஆண்டு அது 63.3 வீதமாகவும் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், 3 பாடங்களிலும் 9 ஆயிரத்து 904 மாணவர்கள் A சித்தி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதில், உயிரியல் துறையில் 817 மாணவர்களும், கணிதத் துறையில் 1088 மாணவர்களும், வணிகவியல் பிரிவில் 4198 மாணவர்களும், கலைப் பிரிவில் 3622 மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்பத் துறையில் 90 மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்பத் துறையில் 73 மாணவர்களும் 3 A சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles