NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3 பேரை பலிகொண்ட வாகன விபத்து…!

3 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் தனியார் பஸ் சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், உரிமையாளருக்கு இடைநிறுத்தப்பட்ட தண்டனையை வழங்கியுள்ளது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த சிறைத்தண்டனையை வழங்கியுள்ளார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 18,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த இரு பயணிகளின் நெருங்கிய உறவினர்கள் இருவருக்கு 150,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் அவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உத்தரவிட்டார்.

குறித்த அபராதம் மற்றும் இழப்பீடுகளை செலுத்த தவறினால் கூடுதலாக 54 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பஸ்ஸின் உரிமையாளருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டனையை நிறைவேற்றுவது 15 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி பஸ் உரிமையாளருக்கு 21,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 250,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Related Articles