NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை பிரதேச செயலகப் பிரிவிற்கும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் கொட்டோபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்போதுள்ள நிலைமைகளின்படி, தரையில் ஆழமான விரிசல், துளைகள், கட்டடங்களின் தரை மற்றும் சுவர்களில் வெடிப்புகள், அடைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share:

Related Articles