NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

300 பாடசாலைகள் மண்சரிவு அபாய பகுதிகளில் உள்ளதாக தகவல்!

300க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், மண்சரிவு அதி அபாய பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அதில் 2,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளன.

2,500க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான பிரதேசங்கள் மண்சரிவு அதி அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles