NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது..!

காலி – படபொல பகுதியில் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 70 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக படபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles