NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மி.மீ  க்கு அதிகமாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles