NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 ஆண்டுகள் கழித்து தோண்டிய போதும் கெடாமல் இருந்த கன்னியாஸ்திரியின் உடல் – அதிர்ச்சி தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

4 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் உக்கலடையாத நிலையில் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019ம் ஆண்டு தனது 95ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது அனைவரும் ஆச்சரியத்திற்குள்ளாகினர். புதைக்கப்பட்ட கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டரின் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்துள்ளது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்துள்ளது.

ஒருவர் இறந்த பின்னர் அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும். ஆனால் அப்படி எதுவுமின்றி கன்னியாஸ்திரியின் உடல் அப்படியே இருந்தமையால், அந்த தகவல பொதுமக்களிடையே வேகமாக பரவியது.

இந்நிலையில், அவரது உடலை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு திரண்டுள்ளனர். அத்துடன் அவரது பாதத்தையும் தொட்டு வணங்கினார்கள். இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles