இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து மத்தியஸ்தரகாக செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.
தற்போது வரை சுமார் 100 பிணைக்கைதிகள் ஹமாஸிடம் உள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 4 பிணைக்கைதிகளை திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை எகிப்து பரிந்துரை செய்துள்ளது.
அதற்கமைய, குறித்த 4 பிணைக்கைதிகளை திரும்பப் பெற 2 நாட்களுக்கான போர் நிறத்தத்திற்கு எகிப்து பரிந்துரை செய்துள்ளது.