NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 வெளிநாட்டு மலைப்பாம்புகளை மறைத்து வைத்திருந்த மூவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் இன்று (21) மீட்டுள்ளனர்.

செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்களும் இதன்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இலங்கையின் அரியவகை முதலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மலைப்பாம்புகள் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டு விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விலங்குகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி அவை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles