NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

400 ஹெக்டேயரில் கோப்பியை பயிரிட தீர்மானம்!

நாட்டில் அடுத்த வருடத்துக்குள் 400 ஹெக்டேயரில் கோப்பியை பயிரிடுவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போது கோப்பி பயிர் பிரதான தோட்டப்பயிராக பயிரிடப்பாத நிலையில், உலக சந்தையில் இலங்கைக் கோப்பிப் பயிருக்கான கேள்வியை கருத்திற்கொண்டு கோப்பியை மீண்டும் தோட்டப் பயிராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்பி பயிருக்காக ஒரு ஹெக்டேயருக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் எனவும், அதில் 50% தொகை மீளப் பெறப்பட மாட்டாது எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 2024 ஆம் ஆண்டுக்கான விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிக்கு 96 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் காஃபியா அரேபிகா (அரேபிகா காபி), காஃபியா கேனெஃபோரா (ரோபஸ்டா காபி), லிபாரிகா (லைபெரிகா காபி) ஆகிய கோப்பி இனங்கள் பயிரிடப்படுகின்றன.

இவற்றில் அரேபிகா கோப்பி மிகவும் பிரபலமான கோப்பி வகையாகும். எனவே அந்த வகை கோப்பி பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஏற்றுமதி விவசாய திணைக்களத்துக்கு விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Related Articles