(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள 300 தொடக்கம் 400 வரையான பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
டொலரின் தேவையுடன் ஒப்பிடும்போது வழங்கல் அதிகரிப்பு காரணமாக, ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் அடிப்படையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உள்ளுர் பொருளாதாரத்தை பாதிக்கும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்கும் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.