தனது புதிய மாடலான W series 4K அல்ட்ரா ஹெச் டி QLED ஸ்மார்ட் தொலைக்காட்சியை ஏசர் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது வசதிகளுடன் தங்கள் நிறுவன தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், அவை அனைத்திற்கும் போட்டியாக இருக்கும் படி ஏசர் நிறுவனமும் தனது புதிய மாடலை சந்தையில் இறக்கி உள்ளது.
55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு மாடல்களில் இந்த டிவி கிடைக்கிறது. இதைத் தவிர பல நவீன வசதிகளுடன் புதிய தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஏசரின் இந்த டபிள்யூ சீரிஸ் தொலைக்காட்சி ஆனது QLED திரையை கொண்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு உச்சகட்ட தரத்திலான ஒரு அனுபவத்தை வழங்குகிறது. மேலும் விளையாட்டுகளை விரும்பி பார்ப்பவர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் இந்த தொலைக்காட்சி ஆனது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அந்த அளவிற்கு மெருகேற்றப்பட்ட நிறங்களுடன் ஒரு அற்புதமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆன்ட்டி கிளார் தொழில்நுட்பத்தின் மூலம் அறையின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமென்றாலும் நம்மால் இந்த தொலைக்காட்சியை மிக சரியாக பார்க்க இயலும். இதன் செட்டிங்கை அதிக பிரைட்டாக மாற்றினாலும் கூட பார்ப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர 30 வாட்ஸ் ஆரல் சவுண்ட் மற்றும் டோல்பி அட்மொஸ் சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இதன் ஆடியோ குவாலிட்டி ஆனது உச்சகட்டத்திலான தரத்தை கொண்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்லீப் பிரேம்லெஸ் எட்ஜ் 2 எட்ஜ் டிஸ்ப்ளே ஆனது மிகவும் ரிச்சான ஒரு லுக்கை இதற்கு கொடுக்கிறது. இதைத் தவிர ஃபுல் மோஷன் ஸ்லிம் வால் மவுன்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சுவற்றில் பொருத்திய பிறகும் கூட நம்மால் இதன் கோணத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
இதன் உட்கட்டமைப்பை பார்த்தால் 64 பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்இந்த சமார் டிவி அதிக அளவிலான செயல் திறனுடன் மிகவும் ஸ்மூத்தாக இயங்குகிறது. மேலும் மிக நவீனமான ஸ்மார்ட் வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவி 11, கூகுள் ஆப்ஸ், மோஷன் சென்சார், ஃபார் ஃபீல்டு மைக் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஸ்மார்ட் ரிமோட் ஆகியவை இதில் அளிக்கப்பட்டுள்ளன.