NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15) இடம்பெறவுள்ளது.

இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குகொள்ளும் அனைத்து பரீட்சார்த்திகளும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் முலட்டியன கல்வி வலயங்களின் பரீட்சார்த்திகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles