NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

5 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே இவ்வாறு தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன.

எனவே, நீர்த்தேக்கங்களின் அருகில் மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles