NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

5 முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம்!

பாரிய நிதி மோசடி மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஐந்து பேர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மீளப்பெற்றப்பட்டு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்ட பல வழக்குகளை மீள் விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை உரிய சட்ட பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வழக்குகள் நிராகரிக்கப்படக் காரணம் தொடர்பான காரணிகள் குறித்தும் இந்த நாட்களில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, நிதிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழு தொடர்பான தகவல்களை பல்வேறு குழுக்களின் ஊடாக தேடி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles