NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

50 டொலருக்கு வாங்கிய நாட்காலி ஒரு லட்சம் டொலருக்கு விற்பனை !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜஸ்டின் மில்லர்பழம்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர்.

பழம்பொருட்கள் தொடர்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த இவருக்கு பழம்பொருட்கள் பற்றிய அருமைகள் புரிந்தது. இந்நிலையில் எதேச்சையாக அவர் ஆன்லைன் தளமான பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை பார்த்துள்ளார்.

அந்த நாற்காலியில் ஏதோ சிறப்பு இருப்பதாக உணர்ந்த அவர் அதனை 50 டாலருக்கு வாங்கி உள்ளார். பின்னர் அந்த நாற்காலியை சீரமைக்க ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

அதன்பிறகு பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார். பழமையான அந்த நாற்காலியை வாங்க கடும் போட்டி ஏற்பட்டு கடைசியில் அந்த நாற்காலி 1 லட்சம் டாலருக்கு ஏலம் போயுள்ளது.

குறித்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles